Home வணிகம்/தொழில் நுட்பம் இலங்கையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்தார் ஜோகூர் சுல்தான்!

இலங்கையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்தார் ஜோகூர் சுல்தான்!

1263
0
SHARE
Ad

Johor Sultanஜோகூர் பாரு – இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிலில், 100 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்திருக்கிறார் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார்.

சொத்து மேம்பாட்டு நிறுவனர் டத்தோ பேட்ரிக் லிம் சூ கிட்டுடன் இணைந்து ஜோகூர் சுல்தான் இம்முதலீட்டை செய்திருக்கிறார்.

ஜோகூர் சுல்தானின் இந்த இலங்கை முதலீட்டிற்கு முன்னதாக, கடந்த மாதம் 7 – லெவன் மலேசியா ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தில், 63.08 மில்லியனுக்கு பங்குகள் வாங்கி, 15.5 விழுக்காடு பங்குகளோடு அந்நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரானார்.

#TamilSchoolmychoice

தொழிலதிபர் டான்ஸ்ரீ வின்செண்ட் டானின் 7-லெவன் நிறுவனத்தில், இதற்கு முன்பு ஜோகூர் சுல்தான், கணிசமான அளவில் தான் பங்குகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், பெர்ஜெயா அசட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தில், 10.09 விழுக்காடு பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தில் தற்போது தனிநபர் பங்குகளில் இரண்டாவது பெரிய பங்குதாரராக ஜோகூர் சுல்தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.