Home நாடு “பகிரங்க விவாதத்திற்குத் தயார்” – மகாதீர்!

“பகிரங்க விவாதத்திற்குத் தயார்” – மகாதீர்!

882
0
SHARE
Ad

mahathir-tun-சைபர் ஜெயா – இன்று சனிக்கிழமை சைபர் ஜெயாவில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட துன் மகாதீர், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது, “எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த பகிரங்க நேரடி விவாதத்திற்கு தயார்” என்றும் “ஆனால், அந்த விவாதம் கட்டுப்பாடுகள் இன்றி நடத்தப்பட்டால் மட்டுமே பங்கு பெறுவேன்” என்றும் அறிவித்தார்.

“விவாதம் என்றால் எல்லாம் பேசப்பட அனுமதிக்கப்பட வேண்டும். மற்றவர்கள் எல்லாவற்றையும் பேசலாம் ஆனால் நாம் மட்டும் 1எம்டிபி பற்றியோ, 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை பற்றியோ பேசக் கூடாது என்றால் அது உண்மையான விவாதம் இல்லை. அத்தகைய விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்” எனவும் மகாதீர் தெரிவித்தார்.