Home நாடு தொண்டர்களைச் சந்தித்தார் கருணாநிதி!

தொண்டர்களைச் சந்தித்தார் கருணாநிதி!

809
0
SHARE
Ad
karunanithi-file pic
கலைஞர் கருணாநிதி – கோப்புப் படம்

சென்னை – இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது இல்லத்தின் முன் குவிந்த திமுக தொண்டர்களை திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சந்தித்ததைத் தொடர்ந்து அவரது கோபாலபுர இல்லத்தில் இன்று உற்சாகம் கரைபுரண்டது.

தள்ளுவண்டியில் வீட்டு வாசல் முன் அமர வைக்கப்பட்ட கருணாநிதியைத் தொண்டர்கள் வரிசையாக வந்து சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றனர். அந்த சமயத்தில் அங்கு நெருக்கடியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

வழக்கமாக ஒவ்வொரு பொங்கல் திருநாளின்போதும் கலைஞர் தனது கோபாலபுர இல்லத்தில் இருந்தபடி திமுக தொண்டர்களைச் சந்திப்பதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ரூபாய் நோட்டை வழங்குவதும் வழக்கமாக இருந்து வந்தது.

#TamilSchoolmychoice

தொண்டர்களும் அந்த ரூபாய் நோட்டைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவார்கள். ஆனால், உடல் நலம் குன்றியிருக்கும் காரணத்தால், இந்த ஆண்டு கருணாநிதி தொண்டர்களைச் சந்திப்பாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக ஊடகங்கள் எழுப்பி வந்தன.

இந்நிலையில் இன்று தொண்டர்களைச் சந்தித்து அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார் கருணாநிதி.