அங்காரா – வடக்கு துருக்கியில் ஓடுபாதையில் வந்திறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, அப்பாதையில் இருந்து விலகி அருகே இருந்த கடலை நோக்கிப் பாய்ந்தது.
எனினும், அதிருஷ்டவசமாக விமானம், மலை மேட்டியிலேயே நின்றதையடுத்து, அதிலிருந்த 162 பயணிகள் சிறுகாயங்களோடு உயிர் தப்பினர்.
துருக்கியின் தலைநகரான அங்காரா விமான நிலையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை 162 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களோடு, பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டிராப்சானை நோக்கிப் புறப்பட்டது.
இந்நிலையில், டிராப்சான் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவ்விமானம், ஓடுபாதையில் இருந்து வழுக்கிச் சென்று அருகே இருந்த கருப்புக் கடலின் மலை மேட்டில் இறங்கியது.
இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்ததோடு, பயத்தில் அலறினர்.
எனினும், சேற்றில் சிக்கி அவ்விமானம் அம்மேட்டிலேயே நின்றுவிட்டதால், உயிர்சேதம் எதுவும் இல்லை.