Home நாடு “கோம்பாக் தொகுதி வேண்டாம்” – மகாதீர்

“கோம்பாக் தொகுதி வேண்டாம்” – மகாதீர்

878
0
SHARE
Ad

MAHATHIR_MOHAMED - 1கோலாலம்பூர் – கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை தனக்காக விட்டுக் கொடுக்க முன்வந்த சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட துன் மகாதீர், இருப்பினும் லங்காவி, குபாங் பாசு, புத்ரா ஜெயா ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றையே தான் தேர்ந்தெடுக்கவிருப்பதாகவும் கூறினார்.

நேற்று செத்தியா வாங்சா தொகுதியில் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

கோம்பாக் தொகுதி அஸ்மின் அலிக்குப் பாதுகாப்பானது அல்ல என்றும் அதைவிடக் கூடுதலாக மகாதீருக்கு பாதுகாப்பற்ற தொகுதி கோம்பாங் என்றும் பாஸ் கட்சி எச்சரித்திருந்தது.