Home Video பாலாவின் ‘நாச்சியார்’ முன்னோட்டம் வெளியீடு

பாலாவின் ‘நாச்சியார்’ முன்னோட்டம் வெளியீடு

1043
0
SHARE
Ad

naachiar movie stillசென்னை – தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா, கடைசியாக எடுத்த ‘தாரை தப்பட்டை’ படம் படுதோல்வியைச் சந்தித்ததோடு, அதன் வக்கிரமான, குரூரமான கதையமைப்பு, காட்சிகளுக்காக பலத்த கண்டனங்களையும் சந்தித்தது.

இருப்பினும் இயக்குநர் என்ற முறையில் பாலாவின் மகிமை இன்னும் குறைந்தபாடில்லை. அவரது அடுத்த படமான ‘நாச்சியார்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜோதிகா நடிப்பதுடன், சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட குறுமுன்னோட்டத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் இந்தப் படத்தில் தோன்றுவதால், இரசிகர்களிடையே ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

நாச்சியார் படத்தின் முதல் தோற்ற குறுமுன்னோட்டத்தில் ஜோதிகா ஒரு கெட்ட வார்த்தை பேசிவிட்டார் என்பது பெரும் சர்ச்சையாக சமூக வலைத் தளங்களில் விவாதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நாச்சியார் படத்தின் புதிய முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-