Home நாடு ஓய்வூதியம் பெறும் காவல்துறையினருக்காக ஆண்டுக்கு 3 மில்லியன் ரிங்கிட் – நஜிப் அறிவிப்பு!

ஓய்வூதியம் பெறும் காவல்துறையினருக்காக ஆண்டுக்கு 3 மில்லியன் ரிங்கிட் – நஜிப் அறிவிப்பு!

862
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – ஓய்வூதியம் பெறும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்காக சுமார் 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக நஜிப் தெரிவித்திருக்கிறார்.

தாபுங் அமனா வாரிசான் போலீஸ் அமைப்பின் கீழ், ஓய்வூதியம் பெறும் காவல்துறையினருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் இந்த 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.