Home கலை உலகம் ஜனவரி 26 முதல் களத்தில் இறங்குகிறேன் – கமல் அறிவிப்பு!

ஜனவரி 26 முதல் களத்தில் இறங்குகிறேன் – கமல் அறிவிப்பு!

834
0
SHARE
Ad

Kamalசென்னை – 2017-ம் ஆண்டிற்கான விகடன் விருது விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதில் கமல்ஹாசன், இளையராஜா, ஏர்.ஆர்.ரஹ்மான், நயன்தாரா என நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், இளையராஜாவிற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான எஸ்.எஸ்.வாசன் விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதனை உலகநாயகன் கமல்ஹாசன் இளையராஜாவிற்கு வழங்கினார்.

அப்போது எப்போது அரசியலுக்கு வரப்போகிறீர்கள் என இளையராஜா கமலிடம் கேட்ட போது, “வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் மக்களைச் சந்திக்கப் போகிறேன். எந்த இடத்தில் தொடங்கப்போகிறேன் என்பதை 18-ம் தேதி ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்” என்று கமல் தெரிவித்தார்.