Home இந்தியா எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு தமிழக மாணவர் மர்ம மரணம்!

எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு தமிழக மாணவர் மர்ம மரணம்!

1263
0
SHARE
Ad

AIMS delhi

புதுடெல்லி – எய்ம்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மேற்படிப்புப் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர் இன்று புதன்கிழமை காலை கழிவறை ஒன்றில் பிணமாகக் கிடந்தார்.

இந்நிலையில், அவரது உடலைக் கைப்பற்றிய டெல்லி காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, சரத்பாபுவின் அறையில் இருந்து ஊசி ஒன்றும், பொட்டாசியம் குளோரைடு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் அவருடன் அறையில் தங்கியிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் மர்ம மரணம் அடைந்தார்.

அவரது அறையில் இருந்தும் இதே போல் ஊசியும், பொட்டாசியம் குளோரைடும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.