Home இந்தியா வைரமுத்துவுக்கு எதிராக சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம்!

வைரமுத்துவுக்கு எதிராக சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம்!

802
0
SHARE
Ad

Vairamuthuசென்னை – ஆண்டாள் குறித்துச் சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று புதன்கிழமை காலை உண்ணாவிரதத்தைத் துவங்கியிருக்கிறார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை, ஜீயர்கள், மடாதிபதிகள், சிவச்சாரியார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்தினர்.

அப்போது வைரமுத்து இன்னும் 24 மணி நேரத்தில் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

எனினும், வைரமுத்து மன்னிப்புக் கேட்காத காரணத்தால், ஜீயர் சடகோப ராமானுஜர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கியிருக்கிறார்.