Home நாடு நாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டது!

நாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டது!

1175
0
SHARE
Ad

Sathisகோலாலம்பூர் – ஸ்ரீபந்தாய், பந்தாய் டாலாமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை 16-வது மாடியிலிருந்து நாற்காலி விழுந்ததில், 15 வயது சிறுவன் சதீஸ்வரன் மரணமடைந்தார்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிய காவல்துறையினர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், விசாரணை செய்யப்பட்டவர்கள் 5 பேரிடம் இருந்து எடுத்த மரபணுக்களையும் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது காவல்துறை.

#TamilSchoolmychoice

இதனிடையே, நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் சதீஸ்வரனின் இறுதிச்சடங்குகள் அவரது வீட்டில் நடைபெற்றது.

அதில், சுமார் 300 பேர் கலந்து கொண்டு சதீஸ்வரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 4 மணியளவில் டாமன்சாரா இந்து மயானத்தில் சதீஸ்வரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.