Home நாடு மலேசியர், இந்தியப் பிரஜைகள் நான்கு பேருக்கு மரண தண்டனை!

மலேசியர், இந்தியப் பிரஜைகள் நான்கு பேருக்கு மரண தண்டனை!

1051
0
SHARE
Ad

Hang deathகோலாலம்பூர் – போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒரு மலேசியர் மற்றும் நான்கு இந்தியப் பிரஜைகளுக்கு ஷா ஆலம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

ஏ.சற்குணன் (வயது 42) என்ற மலேசியர், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சுமேஷ் சுதாகரன், அலெக்ஸ் ஜேகப் அலக்சாண்டர், ரெஞ்சித் ரவீந்திரன் மற்றும் சஜித் சடானந்தன் ஆகிய 5 பேர் மீது அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952, பிரிவு 39பி (1)(ஏ)-ன் கீழ் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

கடந்த 2013-ம் ஆண்டு, செமினி சுங்கை லாடாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 4,252.7 கிராம் மெத்தாம்பெதாமினும், அதே நாளில், அதே நேரத்தில், 1,506.9 கிராம் கெத்தாமினும் கடத்தியது நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice