Home இந்தியா வைரமுத்துவுக்கு எதிராக யாரோ மக்களைத் தூண்டுகிறார்கள்: வைகோ

வைரமுத்துவுக்கு எதிராக யாரோ மக்களைத் தூண்டுகிறார்கள்: வைகோ

1123
0
SHARE
Ad

vaikoசென்னை – ஆண்டாள் பற்றி தான் கூறிய கருத்து, ஆய்வு நூல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று கவிஞர் வைரமுத்து விளக்கமளித்தும் கூட, அவருக்கு எதிராக யரோ மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

தினமணி ஏற்பாட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் வாழ்ந்த காலம் பற்றியும், தேவதாசிகள் பற்றியும் கருத்துத் தெரிவித்திருந்தார். வைரமுத்துவின் அக்கருத்து இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த திங்கட்கிழமை மாலை, வைரமுத்துவுக்கு எதிராக ஜீயர்கள், மடாதிபதிகள், சிவச்சாரியார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்தினர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, ஆண்டாள் குறித்துச் சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.