Home இந்தியா எய்ம்ஸ் மாணவர் மரணம்: சொந்த ஊரான திருப்பூரில் நல்லடக்கம்!

எய்ம்ஸ் மாணவர் மரணம்: சொந்த ஊரான திருப்பூரில் நல்லடக்கம்!

881
0
SHARE
Ad

AIMSstudentdeathடெல்லி – எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு (வயது 28) கடந்த புதன்கிழமை, விடுதி கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல், அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலை அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.