Home உலகம் குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் நியூசிலாந்து பிரதமர்!

குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் நியூசிலாந்து பிரதமர்!

1161
0
SHARE
Ad

Jacinda Ardernவெலிங்டன் – கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் 40-வது பிரதமராகப் பதவியேற்ற ஜாசிண்டா அடெர்ன், தான் கருவுற்றிருப்பதாகவும், ஜூன் மாதம் குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம், பணியில் இருக்கும் போதே குழந்தை பெற்றுக் கொள்ளப் போகும் நியூசிலாந்தின் முதல் பிரதமர் என்ற பெயரை ஜாசிண்டா அடைந்திருக்கிறார்.

கருவுற்றதை தானும் தனது காதலர் கிளார்க்கி கேபோர்டும் எதிர்பார்க்கவில்லை என்றும், என்றாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றும் 37 வயதான ஜாசிண்டா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி. நாங்கள் குடும்பமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் அது எங்களுக்கு நடக்குமா என்பது தெரியவில்லை” என ஜாசிண்டா இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.