Home நாடு ஜோகூர் தொகுதிகள் பங்கீடு – பெர்சாத்துவுக்கு 18 தொகுதிகள்

ஜோகூர் தொகுதிகள் பங்கீடு – பெர்சாத்துவுக்கு 18 தொகுதிகள்

801
0
SHARE
Ad

pakatan harapan-logoஜோகூர் பாரு – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னனணி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிகளுக்கு இடையிலான அரசியல் போராட்டத்தில் முக்கியக் களமாப் பார்க்கப்படுவது ஜோகூர் மாநிலம்.

டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமைத்துவம் – சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் நில மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றால் ஜோகூர் மாநிலத்தில் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பங்கீடுகளில் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன. இந்த உடன்பாட்டின்படி மகாதீர்-மொகிதின் தலைமையிலான பெர்சாத்து கட்சி 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

#TamilSchoolmychoice

அடுத்த நிலையில் ஜசெகவுக்கு 14 சட்டமன்றத் தொகுதிகளும், பிகேஆர் மற்றும் அமானா கட்சிகளுக்கு தலா 12 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்ற பக்காத்தான் கூட்டணி 29 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் குறைந்தது ஒரு சட்டமன்றத் தொகுதி வித்தியாசத்தில் பக்காத்தான் கூட்டணி ஜோகூரைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முடியும்.