Home Video கலங்கிய கண்களுடன் நீண்ட விளக்கத்தோடு வைரமுத்து வருத்தம் தெரிவித்தார் (காணொளி)

கலங்கிய கண்களுடன் நீண்ட விளக்கத்தோடு வைரமுத்து வருத்தம் தெரிவித்தார் (காணொளி)

1297
0
SHARE
Ad

Malaysia in Vairamuthuசென்னை – ஆண்டாள் குறித்துத் தான் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, ஒரு நீண்ட விளக்கத்தை வழங்கியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அந்த விளக்கத்தை ஒரு காணொளி மூலம் இணையத் தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

கலங்கிய கண்களுடன் தனது உரையைத் தொடக்கும் வைரமுத்து “ஆண்டாள் எனக்கும் தாய். தமிழச்சி. எனது தாயையும் ஆண்டாளையும் ஒரே நிலையில் வைத்துத்தான் பார்க்கிறேன்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தனது கருத்தால் யாராவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் வைரமுத்து கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“தமிழ் சமூகம் ஒரு ஞான சமூகம் என்னைப் புரிந்து கொள்வார்கள்” என்றும் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். வைரமுத்து வழங்கிய விளக்கத்தை அடங்கிய அந்தக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-