Home உலகம் காபூல் தங்கும் விடுதியில் தாக்குதல் – 18 பேர் மரணம்!

காபூல் தங்கும் விடுதியில் தாக்குதல் – 18 பேர் மரணம்!

892
0
SHARE
Ad
afghanistan-kabul-intercontinental-attack-21012018
தாக்குதலால் புகைமண்டலம் சூழ்ந்த இண்டர்கொண்டினண்டல் தங்கும் விடுதிக்கு அருகில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர்

காபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இண்டர்கொண்டினண்டல் தங்கும் விடுதியில் (Intercontinental Hotel) நுழைந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்த நிலையில், இதுவரையில் 18 பேர் மரணமடைந்துள்ளனர்.

சுமார் 12 மணி நேரம் இந்தத் தாக்குதல் நீடித்தது. கொல்லப்பட்டவர்களில் 14 பேர் வெளிநாட்டவர், 4 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஆப்கன் பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட 4 தாக்குதல்காரர்களும் மரணமடைந்தவர்களில் அடங்குவர்.

மேலும் பொதுமக்களில் 10 பேர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.