கோலசிலாங்கூர் – தைப்பூசம் மலேசியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நகர்களில் கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயமும் ஒன்று. வழக்கமாக பத்துமலைக்கு தைப்பூசம் திருநாளின்போது வருகை தரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த முறை கோலசிலாங்கூர் தைப்பூசத்தில் கலந்து கொள்கிறார்.

கோலசிலாங்கூர் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் வருகை தருவதை முன்னிட்டு கோலசிலாங்கூர் ஆலய வளாகத்தில் 16 அரசு இலாகாக்கள் தங்களின் பிரதிநிதித்துவ தற்காலிக அலுவலத்தைத் திறந்து வைத்திருக்கும் என்றும் பொதுமக்களுக்கான சேவைகளைக் கையாளும் என்றும் செடிக் எனப்படும் இந்தியர்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாட்டு இலாகாவின் தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் அறிவித்திருக்கிறார்.