Home வணிகம்/தொழில் நுட்பம் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகிறது இந்தியாவின் ஓலா டேக்சி!

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகிறது இந்தியாவின் ஓலா டேக்சி!

878
0
SHARE
Ad

ola-tfsமும்பை – ஊபருடன் போட்டியிட ஆஸ்திரேலியாவில் கால் பதிக்கிறது இந்தியாவின் ஓலா டேக்சி நிறுவனம்.

இதனை அந்நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி பாவிஸ் அகர்வால் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெர்ல்பர்ன் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களில் மிக விரைவில் ஓலா சேவை துவங்கவிருப்பதாகவும், தனியார் வாகன உரிமையாளர்கள் தங்களுடன் கைகோர்க்கும் படியும் ஓலா அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2011-ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான ஓலா தற்போது, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பில்லியன் கணக்கான பயணங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.