Home நாடு இந்திராகாந்தியின் மகள் மலேசியாவில் தான் இருக்கிறார்: ஐஜிபி தகவல்!

இந்திராகாந்தியின் மகள் மலேசியாவில் தான் இருக்கிறார்: ஐஜிபி தகவல்!

797
0
SHARE
Ad

Indragandhicaseகோலாலம்பூர் – பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் மூன்று பிள்ளைகள், அவரது முன்னாள் கணவரால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது செல்லாது என நேற்று திங்கட்கிழமை கூட்டரசு நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில், தனது முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமது ரிதுவானுடன் இருக்கும் தனது இளைய மகள் பிரசன்னா தீக்‌ஷாவை விரைவில் காண வேண்டும் என்றும், அதற்கு காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திராகாந்தி வலியுறுத்தியிருந்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக தான் தனது இளைய மகளைக் காணாமல் தவிப்பதாகவும், ஒரு தாயாக அவரிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விசயங்கள் இருப்பதாகவும் இந்திரா காந்தி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹாருன் வெளியிட்டிருக்கும் தகவலில், இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமது ரிதுவானும், மகள் பிரசன்னா தீக்‌ஷாவும் இன்னும் மலேசியாவில் தான் இருக்கிறார்கள் என்பதைத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.