Home நாடு மின்னல் எஃப்எம்மில் இடைவிடாத தைப்பூச நேரடி நிலவரங்கள்!

மின்னல் எஃப்எம்மில் இடைவிடாத தைப்பூச நேரடி நிலவரங்கள்!

1033
0
SHARE
Ad

MinnalFMகோலாலம்பூர் – தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மின்னல் எஃப்எம், மலேசியாவிலுள்ள 6 முருகன் திருத்தலங்களிலிருந்து 45 மணி நேரடி நிலவரங்களை ஒலிபரப்புகிறது.

பத்துமலை திருத்தலம், பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ கல்லுமலை, சுங்கைப் பட்டாணி சுப்ரமணியம் சுவாமி தேவஸ்தானம், ஜொகூர் பாலதண்டாயுதபாணி, கோலசிலாங்கூர் சுப்ரமணியர் ஆலயம் ஆகிய திருத்தலங்களிலிருந்து நேரடி நிலவரங்களை நேயர்களுக்கு தெரிவிக்கவிருக்கிறது.

தொடர்ந்து 5-வது ஆண்டாக தைப்பூச நேரலை நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மின்னல் எஃப்எம், இந்த ஆண்டும் நேயர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பத்துமலையிலிருந்து தெய்வீகன், ரவின், சுகன்யா, புவனா வீரமோகன், சசி, மோகன் தகவல் மையத்தை வழி நடத்துவதோடு அங்குள்ள தைப்பூச நிலவரங்களை நேரடியாக வழங்குவார்கள்.

பினாங்கு தண்ணீர்மலையிருந்து கலைவாணி, ஈப்போ கல்லுமலையிலிருந்து தியா, கோலசிலாங்கூர் சுப்ரமணியர் ஆலயத்திலிருந்து மோகன் இப்படி மின்னல் எப் எம் அறிவிப்பாளர்கள் தங்கள் பணிகளை குறிப்பிட்ட இடங்களில் மேற்கொள்வார்கள் என மின்னல் எஃப்எம் அறிவித்திருக்கிறது.

மேலும், தைப்பூசத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை, நட்பு ஊடகங்களில், #velava என்ற ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு பதிவு செய்யும் படியும் மின்னல் எஃப்எம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் வழி சிறந்த புகைப்படங்களுக்கு இரண்டாயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும், அதனை வெற்றியின் வழிகாட்டி ஏய்ம்ஸ் பல்கலைகழகம் வழங்குகிறது என்றும் மின்னல் எஃப்எம் கூறியிருக்கிறது.

இதனிடையே, மின்னல் எஃப்எம்  பேஸ்பூக் மூலமாகவும், நேயர்கள் பத்துமலை தைபூசத்தை நேரடியாக காணலாம். மேல் விவரங்களுக்கு வலம் வாருங்கள் www.facebook.com/rtmminnalfm