Home உலகம் தானியங்கி கார் விபத்து: காணொளியை வெளியிட்டது அரிசோனா போலீஸ்!

தானியங்கி கார் விபத்து: காணொளியை வெளியிட்டது அரிசோனா போலீஸ்!

1193
0
SHARE
Ad

தெம்பே, சான் பிரான்சிஸ்கோ – சோதனை ஓட்டத்தில் இருந்த ஊபர் நிறுவனத்தின் தானியங்கிக் கார் ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அரிசோனாவின் தெம்பே பகுதியில், பெண் ஒருவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் அப்பெண் மரணமடைந்தார். உலகில் தானியங்கி கார் மோதி மனிதன் பலியான முதல் விபத்தாக இச்சம்பவம் பதிவாகியிருக்கிறது.

இவ்விபத்து தானியங்கி கார் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய தடைக் கல்லையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இவ்விபத்தை தீவிரமாக விசாரணை செய்து வரும் அரிசோனா காவல்துறை, விபத்து நேர்ந்த போது, தானியங்கிக் காரில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காணொளியை வெளியிட்டிருக்கிறது.