மணிலா – நேற்று புதன்கிழமை போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில், ஒரேநாளில் 13 போதைக் கடத்தல் ஆசாமிகளைச் சுட்டுக் கொன்றதோடு, 100-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்திருக்கிறது பிலிப்பைன்ஸ் காவல்துறை.
போதைக்கு எதிரான போர் என்ற கொள்கையின் படி, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூதெர்தே தலைமையிலான அரசு, 20 மாதங்களில் சுமார் 4,000 போதைப் பித்தர்களை, போலீஸ் உதவியுடன் சுட்டுக் கொன்றது.
மேலும், ஆயிரக்கணக்கானோரை அடையாளம் தெரியாத ஆயுதக் கும்பலால் ஒழித்துக் கட்டியது.
இது குறித்த விசாரணை அதிபர் ரோட்ரிகோ டூதெர்தேவுக்கு எதிராக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.