Home நாடு டான்ஸ்ரீ ரேமண் நவரத்தினம் ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகராக நியமனம்

டான்ஸ்ரீ ரேமண் நவரத்தினம் ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகராக நியமனம்

838
0
SHARE
Ad
Ramon-Navaratnam-
டான்ஸ்ரீ ரேமண் நவரத்தினம்

கோலாலம்பூர் – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ சுல்கிப்ளிக்கு கௌரவ ஆலோசகர்களாக நான்கு பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மலேசிய அரசு சேவைத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி பல உயர் பதவிகளை வகித்திருக்கும் டான்ஸ்ரீ ரேமண் நவரத்தினமும் ஒருவராவார்.

தற்போது ஆசிய வியூக மற்றும் தலைமைத்துவ பயிற்சி மையத்தின் (Asian Strategy and Leadership Institute) இயக்குநராகவும் ரேமண்ட் நவரத்தினம் சேவையாற்றி வருகிறார்.

மாஹ்சா பல்கலைக் கழகத்தின் வேந்தர் சாக்கி முகமட் அஸ்மி, இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியம் நிறுவனத்தின் தலைவர் அபு சாஹார் உஜாங், மலேசிய குற்றத் தடுப்பு அற வாரியத்தின் உயர்நிலை உதவித் தலைவர் லீ லாம் தை ஆகிய மூவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

இவர்கள் நால்வரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார்கள். எதிர்வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் இவர்களின் பதவி நியமனம் 31 ஜனவரி 2020 வரை நீடிக்கும்.

ஊழல் தடுப்பு விவகாரங்களில் ஊழல் ஆணையத் தலைவருக்கு ஆலோசகர்களாக செயல்படுவதோடு, நாட்டில் ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் பணியையும் இந்த நான்கு கௌரவ ஆலோசகர்களும் செய்து வருவார்கள்.