Home நாடு புத்ரா ஜெயா இரவுச் சந்தையில் கவனத்தை ஈர்த்த மகாதீர்!

புத்ரா ஜெயா இரவுச் சந்தையில் கவனத்தை ஈர்த்த மகாதீர்!

955
0
SHARE
Ad

mahathir-putra jaya-pasar malam-29012018 (3)புத்ரா ஜெயா – துன் மகாதீர் எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பெயர் குறிப்பிட்டு கோடி காட்டியிருக்கிறார். ஆனாலும், எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை இதுவரை அறுதியிட்டுக் கூறாமல் தனது அரசியல் எதிரிகளுக்கு சாக்கு போக்கு காட்டி வருகிறார்.

மகாதீர் போட்டியிடப் போவதாகக் கூறப்படும் 3 தொகுதிகள் லங்காவி, குபாங் பாசு, மற்றும் புத்ரா ஜெயா ஆகியவையாகும்.

mahathir-putra jaya-pasar malam-29012018 (1)புத்ரா ஜெயா பிரிசிண்ட் 2 வட்டாரத்திலுள்ள இரவுச் சந்தைக்கு நேற்று மாலை வருகை தந்த மகாதீர் அங்கு வலம் வந்தபோது, அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் அவரைச் சந்திக்க ஆர்வத்துடன் நெருங்கி வந்ததோடு, புகைப்படங்கள் எடுக்கவும் முற்பட்டனர்.

#TamilSchoolmychoice

இதன்மூலம், புத்ரா ஜெயாவிலும் தான் போட்டியிடக் கூடும் என்ற ஊகங்களுக்கு மகாதீர் மேலும் வலு சேர்த்துள்ளார்.

mahathir-putra jaya-pasar malam-29012018 (5)மகாதீர் அந்த இரவுச் சந்தையில் வலம் வந்த காட்சிகளை தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் தனது துணைவியார் தோபுவான் சித்தி ஹஸ்மா இரவுச் சந்தையில் சுற்றி வந்து 4 ரிங்கிட்டுக்கு ஒரு மேலாடையை வாங்கினார் என்றும் தனது டுவிட்டர் தளத்தில் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார். “அதுதான் என் மனைவி சித்தி ஹஸ்மா” என்றும் பெருமைப்பட்டிருக்கிறார் மகாதீர்.

mahathir-putra jaya-pasar malam-29012018 (2)mahathir-putra jaya-pasar malam-29012018 (4)படங்கள்: நன்றி – துன் மகாதீர் முகநூல் பக்கம்