Home நாடு ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய தைப்பூச விழா: பிரதமர் நஜிப், டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய தைப்பூச விழா: பிரதமர் நஜிப், டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

1184
0
SHARE
Ad
Najib1 Thaipusam 2018
புதிதாகக் கட்டப்படவிருக்கும் மண்டபத்திற்கான மாதிரி வடிவத்தை பிரதமர் நஜிப் பார்வையிடுகிறார். அவருடன் டாக்டர் சுப்ரா மற்றும் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் இர்மோஹிசாம் பின் இப்ராகிம்.

கோல சிலாங்கூர் – இன்று புதன்கிழமை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்துடன் கலந்து கொண்டார்.

இவர்களுடன் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் இர்மோஹிசாம் இப்ராகிம் மற்றும் ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி ஆலய நிர்வாகத்தினரும் பங்கேற்றனர்.

Najib Thaipusam 2018கோல சிலாங்கூர் மக்களோடு இணைந்து தைப்பூச விழாவில் பங்கேற்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மலேசியாவில் பல்லின மக்களின் விழாக்கள் அமைதியாகவும், நல்லிணக்கமாகவும் நடைபெறுவதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்வதாகவும் நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

Najib Thaipusam 2018இதனிடையே, இவ்விழாவில் பேசிய டாக்டர் சுப்ரா, “கோல சிலாங்கூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திற்கு பிரதமர் முதல் முறையாக வருகை புரிந்திருக்கிறார். இந்த வட்டாரத்தில் அதிக அளவு இந்திய மக்கள் வசித்துவரும் காரணத்தினாலும், இந்த ஆலயத்திற்கு அதிக அளவு பக்தர்கள் வரும் காரணத்தினாலும், இந்த வருகையை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார். அதேவேளையில், ஆலய நிர்வாகம் இந்த வட்டார மக்களின் தேவைக்காகவும், சமுதாய வளர்ச்சிப் பணியை செய்வதற்காகவும் மண்டபம் கட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள்”

“அதன் அடிப்படையில் பிரதமர் தேசிய முன்னணி அரசாங்கத்திலிருந்து 15 லட்சம் வெள்ளி வழங்குவதாக அறிவித்தார். மீதி நிதியை ஆலய நிர்வாகம் மக்களிடமிருந்து வசூலித்து கட்டுமானப் பணியைத் தொடங்குவார்கள். இந்த மண்டபத்தில் சமூகப் பணிகளைச் செய்வதற்கும், மாணவர்கள் தங்கக் கூடிய விடுதியாகவும், சமூக சேவை மையமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்த மண்டபம் கட்டினால், கோலசிலாங்கூர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

படங்கள்: பிரதமர் நஜிப் டுவிட்டர்