Home கலை உலகம் மலேசியத் தொழிலதிபருடன் தனிவிருந்தா? – அமலா பால் குறித்து அழகேசன் வாக்குமூலம்!

மலேசியத் தொழிலதிபருடன் தனிவிருந்தா? – அமலா பால் குறித்து அழகேசன் வாக்குமூலம்!

1307
0
SHARE
Ad

amalapaulசென்னை – நாளை சனிக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ‘டாஜிலிங் தமிழச்சி’ என்ற கலை நிகழ்ச்சியில், லஷ்மி ராய், ஸ்ரேயா, ஆண்ட்ரியா, இனியா உள்ளிட்ட பிரபல நடிகைகளோடு, நடிகை அமலா பாலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இதற்காக சென்னை தி.நகரில் உள்ள நடன இயக்குநர் ஸ்ரீதரின் நடனப் பயிற்சிப் பள்ளியில், அமலா கடந்த சில நாட்களாக நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், மலேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழுவைச் சேர்ந்தவர் என்று கூறி அழகேசன் என்பவர் தன்னைச் சந்தித்ததாகவும், தன்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல் தகாத முறையில் பேசியதாகவும் காவல்நிலையத்தில் அமலா பால் புகார் அளித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், மலேசியாவிற்கு தான் செல்வது பற்றியும், அங்கு தனது ஓய்வு நேரம் பற்றியும் அழகேசனுக்கு யார் தகவல் கொடுத்தது என்று தெரியவில்லை என்றும் அமலா பால் கூறினார்.

இதனையடுத்து, அழகேசன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மலேசியாவில் தொழிலதிபர் ஒருவருடன் அமலா பால் தனிவிருந்து ஒன்றில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அதை உறுதி செய்யவே பாஸ்கர் என்பவர் தன்னை அமலா பாலைச் சந்திக்க அனுப்பியதாகவும் அழகேசன் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக பாலிமர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனினும், பாஸ்கர் என்பவரது முகவரி, தொலைப்பேசி எண் போன்றவை தனக்குத் தெரியாது என்று அழகேசன் கூறுவதால், அதனை நம்ப மறுத்து தற்போது மேல்விசாரணையை காவல்துறையினர் துவங்கியிருக்கின்றனர்.