கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து இன்று மலேசியப் பங்கு சந்தை 50 புள்ளிகளுக்கும் மேலாக சரிவு கண்டது.
இன்று மாலை 5.00 மணியளவில் மலேசியப் பங்குச் சந்தை வணிகப் பரிமாற்றத்தை நிறைவு செய்தபோது 40.62 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 1,812.45 புள்ளிகளாக இருந்தது.
மலேசியா மட்டுமின்றி மற்ற ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன.
மலேசியப் பங்குச் சந்தை மீட்சி பெறாமல் இவ்வாறு தொடர்ந்து சரிந்து வந்தால், விரைவில் பொதுத் தேர்தலை எதிர்நோக்கவிருக்கும் பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு பெரிதும் தலையிடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது தலைமைத்துவத்தின் கீழ் மலேசியப் பொருளாதாரம் மேன்மையடைந்து வருவதாக நஜிப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.