Home நாடு ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு 6.9 விழுக்காடு இலாப ஈவு

ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு 6.9 விழுக்காடு இலாப ஈவு

1306
0
SHARE
Ad

EPF-kwsp-logoபுத்ரா ஜெயா – ஊடகங்களின் ஆரூடங்களுக்கேற்ப இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு 2017-ஆம் ஆண்டிற்கு 6.9 விழுக்காடு இலாப ஈவு வழங்கப்படும் என அந்த வாரியம் அறிவித்துள்ளது. ஷாரியா முறைப்படியான சேமிப்புகளுக்கு 6.4 விழுக்காடு இலாப ஈவு வழங்கப்படுகிறது.

இவ்வளவு அதிக பட்ச இலாப ஈவு கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போதுதான் வழங்கப்படுகிறது. “ஊழியர் சேமநிதி வாரியத்தின் இத்தகைய அதிக பட்ச இலாப ஈவு வழங்கப்படுவதற்கான காரணம், முறையான முதலீடுகள்தான் காரணம்” என பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டில் 5.7 விழுக்காடு இலாப ஈவு மட்டுமே ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு வழங்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது 2017-ஆம் ஆண்டில் 1.2 விழுக்காடு கூடுதலாக இலாப ஈவு வழங்கப்படுகிறது. இந்த விழுக்காட்டின்படி மொத்தம் 44.15 பில்லியன் ரிங்கிட் இலாப ஈவாக வழங்கப்படும். ஷாரியா சேமிப்புகளுக்கு 3.98 பில்லியன் ரிங்கிட் வழங்கப்படும்.