சென்னை – பார்த்திபன், சீதா தம்பதியின் இளைய மகள் கீர்த்தனா, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றவர்.
அதன் பின்னர், திரைப்படங்களில் நடிக்காத கீர்த்தனா, இயக்குநர் மனிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குநருமான அக்ஷய்க்கும், கீர்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று, வரும் மார்ச் 8-ம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
#TamilSchoolmychoice
தனது 18-வது வயதில் இருந்து கடந்த 8 ஆண்டுகளாக கீர்த்தனா, அக்ஷயை காதலித்து வந்தார் என அவரது தாயார் சீதா தெரிவித்திருக்கிறார்.