Home நாடு “எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்!

“எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்!

1228
0
SHARE
Ad

Vasanthapriyaநிபோங் திபால் – ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு இரகசிய கண்காணிப்புக் கேமரா ஆதாரம் கிடைத்திருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டதையடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி ,”எனது மகளைப் பறிகொடுத்த துயரத்தில் உணவு, உறக்கமின்றி இருக்கிறேன். தயவு செய்து இறந்து போன எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

“எனது மகளை நான் எப்படி வளர்த்தேன் என்பது எனக்குத் தெரியும். சில தரப்பினர் ஆசிரியரின் போனை எனது மகள் தான் எடுத்ததாகச் சொல்கின்றனர். ஆனால் எனது மகளைப் பற்றி எனக்குத் தெரியும்”

“நான் அவளை மிகவும் நேசித்தேன். அவளது மறைவிற்குப் பிறகு உணவு, உறக்கமின்றி தவித்து வருகின்றேன்” என்று முனியாண்டி உருக்கமாகத் தெரிவித்தார்.

இதனிடையே, பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியானில் வெளியிடப்பட்ட இரகசியக் கண்காணிப்பு கேமரா குறித்த செய்தியை மறுத்தார்.
“அது யார் என்பதை உறுதிப்படுத்த நமக்கு தடவியல் நிபுணர்களின் உதவி தேவை. அதனால், இது குறித்து இப்போதைக்கு யாரும் கருத்துச் சொல்ல வேண்டாம்.”
#TamilSchoolmychoice

“இப்போதைக்கு, என்னவெல்லாம் எழுதுகிறார்களோ அல்லது பேசுகிறார்களோ அதெல்லாம் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தான்” என்று தெய்வீகன் தெரிவித்தார்.