Home உலகம் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது!

2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது!

1191
0
SHARE
Ad

London Airportலண்டன் – லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்றைக் கண்டறிந்தனர்.

அது குறித்து காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்து சோதனை நடத்திய அதிகாரிகள் அது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, உடனடியாக, குண்டு கண்டுபிடிக்கப்பட்ட தேம்ஸ் நதிக்கரைக்கு அருகே 214 மீட்டர் வரையில் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததோடு, அங்கிருந்த மக்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

#TamilSchoolmychoice

தேம்ஸ் நதிக்கரை அருகே லண்டன் சிட்டி விமான நிலையம் அமைந்திருப்பதால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதோடு, விமானங்கள் தரையிறங்கவும், பறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டன.

இதனால், சுமார் 16,000 பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே, கண்டறியப்பட்டிருக்கும் வெடிகுண்டை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.