Home நாடு பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

1264
0
SHARE
Ad

abdul manan ismail-decd-paya besar MPகோலாலம்பூர் – பகாங் மாநிலத்திலுள்ள பாயா பெசார் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் மானான் இஸ்மாயில் இன்று திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் தலைநகர் தாமான் மெலாவாத்தியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

70 வயதான அவர் தனது இல்லத்தின் குளியலறையில் கீழே விழுந்ததைத் தொடர்ந்து காலமானார் என அவரது சகோதரரும் பாயா பெசார் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் சுபியான் அப்துல் மானான் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் 7,715 வாக்குகள் பெரும்பான்மையில் பாயா பெசார் தொகுதியில் அப்துல் மானான் வெற்றி பெற்றார். 2008 பொதுத் தேர்தலிலும் பாயா பெசார் தொகுதியை அவர் வெற்றிகரமாகத் தற்காத்தார்.