Home நாடு வசந்தபிரியா வழக்கு: நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ‘தமிழன் குரல்’ வலியுறுத்து!

வசந்தபிரியா வழக்கு: நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ‘தமிழன் குரல்’ வலியுறுத்து!

1133
0
SHARE
Ad

Vasanthapriyaகோலாலம்பூர் – வசந்தபிரியா தான் ஆசிரியரின் ஐபோனை எடுத்தார் என்பதற்கான இரகசியக் கண்காணிப்பு கேமரா ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் தங்களது செயலுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வசந்தபிரியா வழக்கில், அவரது பெற்றோருக்கு உதவியாக இருந்து வரும் அரசு சாரா அமைப்பான மலேசியன் தமிழர் குரல் வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து மலேசியன் தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் கூறுகையில், “அடிப்படை ஆதாராமற்ற செய்தியை வெளியிட்டு, தன்னை இறுதி வரைத் தற்காத்துக் கொள்ள முடியாமல் போன அம்மாணவிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தியிருக்கின்றனர்.”

“அந்த நாளிதழை காவல்துறை விசாரணை செய்து எங்கிருந்து அவர்கள் அந்தத் தகவலைப் பெற்றார்கள் என்பதை விசாரணை செய்ய வேண்டும். நாங்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வசந்தபிரியா ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவரா?

இதனிடையே, கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வசந்தபிரியா கடந்த 2016-ம் ஆண்டே ஒருமுறை மணிக்கட்டை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார்.

இதனை மறுத்த வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி, தனது மகளைப் பற்றி தனக்கு தான் தெரியும் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்பி மேலும் அவரைக் களங்கப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.