Home நாடு “கேவியசுடன் காப்பி அருந்தினேன். ஆனால் கேமரன் தொகுதி மஇகாவுக்குத்தான்”

“கேவியசுடன் காப்பி அருந்தினேன். ஆனால் கேமரன் தொகுதி மஇகாவுக்குத்தான்”

1146
0
SHARE
Ad

drsubra-segi-eyecare-opening-27112017புத்ரா ஜெயா – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி தனது மைபிபிபி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அங்கு நான்தான் போட்டியிடுவேன் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் கேவியசைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, காப்பி அருந்தியதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

எனினும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் மஇகாதான் போட்டியிடும் என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என டாக்டர் சுப்ரா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் புத்ரா ஜெயாவில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் சுப்ரா “ஒருமுறை டான்ஸ்ரீ கேவியசுடன் சுமுகமான சந்திப்பு ஒன்றை நடத்தினேன். நாங்கள் இருவரும் காப்பி அருந்தினோம். ஆனால், கேமரன் மலையில் மஇகாதான் போட்டியிடும். அந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். பிரதமரும் அந்த முடிவை ஆதரிப்பார்” எனக் கூறியிருக்கிறார்.