Home நாடு வசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா

வசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா

1294
0
SHARE
Ad

subra-dr-kota kinabalu-queen elizabeth hospitalகோலாலம்பூர் – மரணமடைந்த மாணவி வசந்தபிரியா தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் குறித்த கருத்தைக் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் சுப்ரா “அத்தகைய கருத்தைக் கூறுவது கமலநாதன் வரம்பிற்கு உட்பட்டதல்ல. முறையாக அத்தகைய கருத்தை காவல் துறையினரோ அல்லது கல்வி அமைச்சைச் சார்ந்தவர்களோ கூறியிருக்க வேண்டும். நாம் மரணமடைந்த மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த மாணவியின் நற்பெயரையோ அல்லது அவரது குடும்பத்தின் நற்பெயரையோ குலைக்கும் வண்ணம் எந்தத் தகவலையும் நாம் வெளியிடக் கூடாது” எனவும் டாக்டர் சுப்ரா கூறியிருக்கிறார்.