Home Photo News சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் தே.முன்னணி தலைவர்கள் (படக் காட்சிகள்)

சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் தே.முன்னணி தலைவர்கள் (படக் காட்சிகள்)

1167
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 16-ஆம் தேதி சீனப் புத்தாண்டின் முதல் நாள் கொண்டாட்டங்கள் நாடெங்கும் கோலாகலமாக நடைபெற்றன.

தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளாக மலேசிய சீனர் சங்கம் கட்சியும், கெராக்கான் கட்சியும் தனித்தனியாக தங்களின் கட்சி தலைமையகக் கட்டடங்களில் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தினர்.

அந்தத் திறந்த இல்ல உபசரிப்புகளில் பிரதமர், துணைப் பிரதமர் உட்பட தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், சமூகத் தலைவர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

டான்ஸ்ரீ கேவியஸ், டாக்டர் சுப்ரா, துன் சாமிவேலு…
மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான், ஐபிஎப் தலைவர் சம்பந்தன் ஆகியோர் சாமிவேலு, டாக்டர் சுப்ராவுடன்…
சீன பாரம்பரியப்படி தே.மு.தலைவர்கள் உணவு உண்ணத் தயாராகிறார்கள்
பிரதான மேடையில் பிரதமர் தம்பதியர்களுடன் தேசிய முன்னணி தலைவர்கள் – போன்சாய் மரத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது
டாக்டர் சுப்ரா, துணைப் பிரதமர் சாஹிட், மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்
மசீசவின் முன்னாள் தேசியத் தலைவர் டான் கூன் சுவான், துன் சாமிவேலு, டாக்டர் சுப்ரா…
டாக்டர் சுப்ராவை வரவேற்கும் மசீச தலைவர்
கெராக்கான் விருந்துபசரிப்பில் கெராக்கான் உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை, மைபிபிபி தேசியத் தலைவர் கேவியஸ், மஇகா தேசியத் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி…
கெராக்கான் உபசரிப்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மா சியூ கியோங்