Home நாடு வலைப்பதிவாளர் நாம் வீ கைது!

வலைப்பதிவாளர் நாம் வீ கைது!

795
0
SHARE
Ad
நாம் வீ – கோப்புப் படம்

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய வலைப் பதிவாளர் நாம் வீ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘லைக் எ டோக்’ (Like A Dog) என்ற தலைப்பில் – ஒரு நாயைப் போல என்ற பொருளில் – அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் 4 காவல் துறை புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நாம் வீ கைது செய்யப்பட்டதை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் முகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் இனங்களுக்கிடையில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் நாம் வீ, குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு, பல்ஊடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்.