Home கலை உலகம் ஸ்ரீதேவி நல்லுடலைக் கொண்டு வருவதில் தாமதம்

ஸ்ரீதேவி நல்லுடலைக் கொண்டு வருவதில் தாமதம்

1049
0
SHARE
Ad

மும்பை – துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் மீதான பிரேதப் பரிசோதனைகள் நடந்து வரும் வேளையில் துபாய் நாட்டில் பின்பற்றப்படும் மருத்துவப் பரிசோதனை நடைமுறைகள் காரணமாக, அவரது உடலை மும்பைக்குக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீதேவியின் நல்லுடலை மும்பைக்குக் கொண்டுவர இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அம்பானி தனது தனிவிமானத்தை துபாய் அனுப்பியிருக்கிறார். அந்த விமானம் ஸ்ரீதேவியின் நல்லுடலை ஏந்திவர துபாயில் காத்திருக்கிறது.

இதற்கிடையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் இளைய சகோதரர் சஞ்சய் கபூர் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கிருந்தவாறு அவ்வப்போது ஊடகங்களுக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும்,  வழங்கப்பட்டு வருவதாக துபாயில் உள்ள இந்தியத் தூதர் அறிவித்துள்ளார்.