Home நாடு பாலா வாழை இலை உணவகத்தில் மகாதீர்!

பாலா வாழை இலை உணவகத்தில் மகாதீர்!

1073
0
SHARE
Ad
துன் மகாதீர் – சித்தி ஹஸ்மாவுடன் பாலா வாழை இலை உணவக உரிமையாளர் டேவிட் பாலா

கோலாலம்பூர் – நாடு முழுவதும் பல இடங்களுக்கும் சென்று தனது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்குப் பிரச்சாரம் செய்து வரும் துன் மகாதீர், அவ்வப்போது பொது இடங்களுக்கும் திடீர் வருகை மேற்கொண்டு, பொதுமக்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அண்மையில் புத்ரா ஜெயாவிலுள்ள இரவுச் சந்தைக்கு (பாசார் மாலாம்) வருகை தந்து பொதுமக்களோடு அளவளாவிய மகாதீர், கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி பங்சாரிலுள்ள பிரபல இந்திய உணவகமான ‘பாலா வாழை இலை’ உணவகத்திற்கு காலை உணவுக்கு வருகை தந்து அந்த நேரத்தில் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

தொடர்ந்து உணவகத்தில் இருந்த பொதுமக்களிடம் கைகுலுக்கி அளவளாவியதோடு, ஆர்வத்துடன் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முனைந்தவர்களோடும் மகாதீர் ஒத்துழைத்தார்.

#TamilSchoolmychoice

பாலா வாழை இலை உணவகத்தின் உரிமையாளர் டேவிட் பாலா மகாதீருக்கு தனது உணவகத்தில் வரவேற்பளித்தார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் உலா வருகின்றன.