Home கலை உலகம் 21 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் ஸ்ரீதேவி நல்லுடல் தகனம்!

21 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் ஸ்ரீதேவி நல்லுடல் தகனம்!

1115
0
SHARE
Ad

மும்பை – துபாய் தங்கும்விடுதியில், கடந்த சனிக்கிழமை, குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் மும்பை வந்தடைந்தது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை 9.30 மணி முதல், ஸ்ரீதேவியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகிலுள்ள செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற இடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஸ்ரீதேவி நல்லுடல் வைக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலை முதல் இந்திய சினிமா நட்சத்திரங்களோடு, ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ஸ்ரீதேவியின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்று பிற்பகல் இந்திய நேரப்படி, 2 மணியளவில், அங்கிருந்து ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விலே பார்லே பகுதியில் உள்ள சேவா சமாஜ் மயானத்தில் தகனம் செய்யப்படவிருக்கிறது.

ஸ்ரீதேவியின் உடலின் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு, மஹாராஷ்டிர மாநில அரச மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.