Home நாடு நஜிப்பை நிராகரிக்கும்படி கூறவே பெக்கான் வந்தேன் : மகாதீர்

நஜிப்பை நிராகரிக்கும்படி கூறவே பெக்கான் வந்தேன் : மகாதீர்

910
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நஜிப்பின் சொந்த ஊரான பெக்கானுக்கு இன்று புதன்கிழமை வருகை புரிந்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, நஜிப்பை நிராகரிக்கும் படி பெக்கான் மக்களிடம் கூறுவதற்காக தான் இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

“எனக்குத் தெரியும் நஜிப் பெக்கானைச் சேர்ந்தவர் என்று. அவர் இங்குள்ளவர். ஆனால் இங்குள்ள ஒருவர் தவறு செய்தால், அவர் நிராகரிக்கப்பட வேண்டும்” என குவாந்தானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் நஜிப் லங்காவி சென்றதற்காக, பதிலுக்கு மகாதீர் பெக்கான் வந்திருக்கிறாரா? என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த மகாதீர், “நான் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறேன். ஆனால் எனது கவனம் முழுவதும் பெக்கானில் தான் இருக்கிறது. காரணம் நஜிப்பின் கவனம் லங்காவியில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
எனினும், பக்காத்தான் சார்பில் நஜிப்புக்கு எதிராக தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றும் மகாதீர் தெரிவித்தார்.