Home வணிகம்/தொழில் நுட்பம் சாங்கி விமான நிலையக் கட்டணம் 13.30 டாலருக்கும் அதிகமாக உயர்வு!

சாங்கி விமான நிலையக் கட்டணம் 13.30 டாலருக்கும் அதிகமாக உயர்வு!

854
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சாங்கி விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் $13.30 காசுகளுக்கும் கூடுதலாகச் செலுத்த வேண்டுமென சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கழகம் இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது.

சாங்கி விமான நிலையத்தின் 5-வது முனையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக இப்புதியக் கட்டணங்கள் வசூலிக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்புதிய கட்டணங்களின் படி, சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் $10.80 காசுகளும், சாங்கிக்கு வரும் இடைநிலைப் பயணிகள் $3 செலுத்த வேண்டும்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், வரும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து பயணிகள் சேவைப் பாதுகாப்புக் கட்டணமும் $2.50 அதிகரிக்கிறது.

2019-ம் ஆண்டிலிருந்து 2024-ம் ஆண்டு வரையில், ஆண்டுக்கு $2.50 வீதம் இக்கட்டணம் உயரவிருக்கிறது.

தற்போது, சாங்கி விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் கட்டணமாக தலா $34 செலுத்துகின்றனர். வரும் ஜூலை முதல் அது $47.30 ஆக உயரவிருப்பது குறிப்பிடத்தக்கது.