Home உலகம் ஜோ லோவின் ஆடம்பரப் படகு இந்தோனிசியாவில் முடக்கப்பட்டது!

ஜோ லோவின் ஆடம்பரப் படகு இந்தோனிசியாவில் முடக்கப்பட்டது!

956
0
SHARE
Ad

பாலி – 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து சுரண்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் ஆடம்பரப் படகை பாலியில் உள்ள தெலுக் பெனா என்ற இடத்தில் இன்று புதன்கிழமை அமெரிக்க குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் முடக்கினர்.

‘தி ஈகுவானிமிட்டி’ என்ற பெயர் கொண்ட அப்படகு 34 பணியாளர்களுடன், கடந்த 2017 நவம்பர் மாதத்திலிருந்து இந்தோனிசியக் கடலில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இதனிடையே, சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் (1 பில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள அந்த ஆடம்பரப் படகில் தொழிலதிபர் ஜோ லோ இருந்தாரா? என்பது குறித்தத் தகவல்கள் இல்லை.

#TamilSchoolmychoice

ஆனால், அந்த ஆடம்பரப் படகை ஜோ லோ, ஹாலிவுட்டைச் சேர்ந்த டிகார்பிரியோ, அழகி மிரண்டா கெர் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்களுடன் பகட்டான கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தினார் என்பதற்குப் பல புகைப்பட ஆதாரங்கள் இதற்கு முன் வெளிவந்திருக்கின்றன.

அப்புகைப்படங்களை 1எம்டிபி வழக்கை விசாரணை செய்து வரும் அமெரிக்க நீதித்துறை எடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.