Home இந்தியா கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி!

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி!

771
0
SHARE
Ad

சென்னை – திமுக தலைவர் மு.கருணாநிதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது கோபாலபுரம் வீட்டிலேயே இருந்து வருகின்றார்.

அவ்வப்போது முக்கியத் தலைவர்களோ அல்லது அவரது மகனும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினோ கருணாநிதியைச் சந்திக்கும் போது, புகைப்படமோ, காணொளியோ வெளியிடப்பட்டு வருகின்றது.

இது திமுக தொண்டர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனது பேரன் அருள்நிதியின் மகன் மகிழாவுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி திமுக தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

அக்காணொளியை இங்கே காணலாம்: