கோத்தா கினபாலு – சபா மாநிலம் தெலுபிட் என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று வியாழக்கிழமை காட்டுயானை ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காலை 6 மணியளவில் அப்பள்ளியின் வளாகத்திற்குள் புகுந்த அந்த யானை நேராக பள்ளியின் உணவகத்திற்குள் நுழைந்து அங்கு உணவைத் தேடியதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து பெலுரான் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் வி.சிவநாதன் கூறுகையில், இச்சம்பவம் காலை 6 மணியளவில் நடந்திருக்கிறது. தெலுபிட் பகுதியில் யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது இது இரண்டாவது முறையாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, பெலுரான் காவல்நிலையத்திற்கு சுமார் 10 யானைகள் தடுப்பு வேலியைத் தாண்டி நுழைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.