Home நாடு பெர்சே மரியா சின் பொதுத் தேர்தலில் போட்டி!

பெர்சே மரியா சின் பொதுத் தேர்தலில் போட்டி!

791
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக உலவி வந்த ஆரூடங்களுக்கு ஏற்ப பெர்சே 2.0 தேர்தல் சீர்திருத்த இயக்கத்தின் தலைவியான மரியா சின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பெர்சே தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

அவர் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் ஒரு பொது வேட்பாளராக – எந்தக் கட்சியிலும் சேராத வேட்பாளராக – போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மரியா சின் கூடுதல் விவரங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் சார்பாக அவர் பத்து நாடாளுமன்றம் அல்லது பெட்டாலிங் ஜெயா செலாத்தான் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சியின் தியான் சுவா தனது வழக்குகளிலிருந்து விடுபட்டு, மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதால் பத்து தொகுதியிலேயே தியான் சுவா மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எந்தத் தொகுதியில் மரியா சின் நிறுத்தப்படுவார் என்ற ஆர்வமும், பரபரப்பும் அரசியல் ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.