Home நாடு கேமரன் மலை தேர்தல் மையம் – டாக்டர் சுப்ரா திறந்து வைக்கிறார்

கேமரன் மலை தேர்தல் மையம் – டாக்டர் சுப்ரா திறந்து வைக்கிறார்

837
0
SHARE
Ad

தானா ராத்தா – கேமரன் மலை நாடாளுமன்றம் எங்களுக்குத்தான் என டான்ஸ்ரீ கேவியசின் தலைமையிலான மைபிபிபி கட்சி இழுபறிப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கேமரன் மலைக்கு வருகை தருகிறார்.

கேமரன் மலை மஇகாவுக்குத்தான் என ஏற்கனவே உறுதிபட அறிவித்திருக்கும் டாக்டர் சுப்ரா, தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் சேவை மையத்தை தானா ராத்தாவில் மார்ச் 6-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் திறந்து வைக்கிறார்.

கேமரன் மலை நாடாளுமன்றம் மஇகாவுக்கென்பதை உறுதிப்படுத்தும் மற்றொரு அறிகுறியாக இந்தத் தேர்தல் சேவை மையத் திறப்பு விழா பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தனது வருகையின்போது கேமரன் மலையின் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை டாக்டர் சுப்ரா வெளியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கேமரன் மலைத் தொகுதிக்கான மஇகா ஒருங்கிணைப்பாளராக மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஏற்கனவே நியமிக்கப்பட்டு, கேமரன் மலையில் தீவிரமான களப் பணிகளை அவர் அந்தத் தொகுதியில் ஆற்றி வருகிறார்.

கேமரன் மலை தே.முன்னணி தேர்தல் மையம் திறப்பு விழா அழைப்பிதழ்