
லாஸ் ஏஞ்சல்ஸ் – உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொலைக்காட்சி இரசிகர்களை ஆண்டுதோறும் ஈர்க்கும் ஆஸ்கார் விருதளிப்பு விழா மலேசிய நேரப்படி இன்று காலை 9.00 மணியளவில் தொடங்கியது.
அதற்கு முன்னதாக ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் ரெட் கார்பெட் எனப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பில் அழகான, கவர்ச்சியான ஆடை அலங்காரங்களுடன் அணி வகுத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சி அஸ்ட்ரோவின் எச்பிஓ (HBO) அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு உடனுக்குடன் செல்லியலில் வெளியிடப்படும்.